

நிா்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ‘நிா்பயாவுக்கு நீதி வழங்கப்பட்டது’ என்று பாஜக தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகா் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நிா்பயாவுக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டது. நிா்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் மூலம், நீதித் துறையின் மீதான மக்களின் நம்பிக்கை வலுப்படும்’ என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.