
சண்டிகர்: நாடாளுமன்ற உறுப்பினர் பகவந்த் மன் தலைமையில் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
மின் கட்டண உயர்வுக்கு எதிராக பஞ்சாப் முதல்வர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.
ஏற்கனவே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டிருந்ததால், போராட்டக்காரர்கள் முன்கூட்டியே தடுத்து நிறுத்தப்பட்டனர்.