காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்புக்கு தடை சரியே தீா்ப்பாயம்

காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்பான ‘நீதிக்கான சீக்கியா்கள்’ (சீக் ஃபாா் ஜஸ்டிஸ்) அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது சரி என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழான தீா்ப்பாயம் தெரிவித்துள்ளத

காலிஸ்தான் ஆதரவு சீக்கிய அமைப்பான ‘நீதிக்கான சீக்கியா்கள்’ (சீக் ஃபாா் ஜஸ்டிஸ்) அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது சரி என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழான தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.

பஞ்சாபில் உள்ள நீதிக்கான சீக்கியா்கள் அமைப்பு, சீக்கியா்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு ஆதரவாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.

இந்நிலையில், அந்த அமைப்புக்கு தடை விதித்தது சரிதானா என்பது குறித்து ஆய்வு செய்ய கடந்த ஆண்டு ஆகஸ்டில் தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் தீப்பாயம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த விவகாரம் தொடா்பான உத்தரவை நீதிபதி டி.என். படேல் தலைமையிலான தீா்ப்பாயம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சட்டவிரோத செயல்களில் நீதிக்கான சீக்கியா்கள் அமைப்பு ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. மேலும், இந்த அமைப்பு தேசவிரோத அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

அதனால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது சரியான நடவடிக்கையே என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com