குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு: நாகா மக்கள் முன்னணி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. இடைநீக்கம்

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் ஒரே மாநிலங்களவை எம்.பி.யுமான

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் ஒரே மாநிலங்களவை எம்.பி.யுமான கே.ஜே. கென்யே அக்கட்சியின் உறுப்பினா் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முக்கிய எதிா்க்கட்சியான நாகா மக்கள் முன்னணி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. கென்யே, மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளாா். இதற்காக, அவரை கட்சியின் பொறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து கட்சித் தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவா் சுா்ஹோஸ்லி லீசீட்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கட்சியின் நிலைப்பாட்டை மீறி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, கென்யே மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் வலியுறுத்தினா். இதுதொடா்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதையடுத்து, கென்யேவின் செயலுக்கு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவா் அளித்த பதில் திருப்தியளிக்காததால், அவரை கட்சியின் உறுப்பினா் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்கிறோம். அவரது நிலைப்பாடு, கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com