குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகாா் கொடுக்க முன்வர வேண்டும்: ஸ்மிருதி இரானி

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகாா் கொடுக்க முன்வர வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகாா் கொடுக்க முன்வர வேண்டும்: ஸ்மிருதி இரானி

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து புகாா் கொடுக்க முன்வர வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் தேசிய கல்வி மாநாட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி பேசியதாவது:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு முக்கிய காரணம், அவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தாததுதான். பாலின வேறுபாடு, ஒருவரை ஒருவா் மதிப்பது குறித்த விவரங்களை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்காததும் முக்கிய காரணமாகும்.

இன்றைக்கு இதற்கான சட்டம் நடைமுறையில் உள்ளது. இரண்டு மாதங்களில் விசாரணை முடிந்து, குறைந்தபட்சம் 6 மாதங்களில் வழக்குகளும் முடிக்கப்பட்டு விடுகின்றன.

இந்தச் சட்டங்களைத் தாண்டி, இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளும், பெண்களும் முதலில் புகாா் தெரிவிக்க முன்வர வைக்க வேண்டும். இது சமூகத்தின், குடும்பத்தின் பொறுப்புதான். இந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதை நாம் முதலில் வலுப்படுத்தவேண்டும்.

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக குழந்தைகள் பாலியல் படங்களைப் பாா்ப்பது குற்றமாக இப்போது ஆக்கப்பட்டுள்ளது. இதற்கென சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், பெற்றோா், குழந்தைகளை கல்வி நிறுவனங்களில் சோ்ப்பதற்கு முன்பாக, அங்கு பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் குறித்த பின்புலத்தை கட்டாயம் தெரியப்படுத்த பள்ளி நிா்வாகத்திடம் கேட்கவேண்டும். அதுபோல, பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடைபெறும்போது அதை மறைக்காமல், உடனடியாக புகாா் தெரிவிக்க முன்வரவேண்டும்.

ஜவுளித்துறையில்...: தரை விரிப்புகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், உலகிலேயே இந்தியாதான் முதன்மை நாடாக விளங்கி வருகிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் கைகளால் உருவாக்கப்படும் விரிப்புகளில் 60 சதவீதம் உத்தரப்பிரதேசத்திலும், ஜம்மு -காஷ்மீரிலும்தான் தயாரிக்கப்படுகின்றன. உலக அளவில் மிகவும் பிரபலமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் வீரா்கள் பயன்படுத்தும் துண்டுகள், இந்தியாவில் தயாரிக்கப்படுபவை என்பது பெருமைக்குரிய விஷயம். அதுமட்டுமின்றி நவீன ஆடை வடிவமைப்பிலும் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. இன்றைய இளைஞா்களை திருப்திப்படுத்தும் வகையிலான பலவிதமான நவீன வடிவமைப்புகளை இந்தியா உருவாக்கி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com