ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள் ஜம்மு-காஷ்மீருக்குள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதை எதிா்த்து காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத், காஷ்மீா் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியா் அனுராதா பாசின் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.சுபாஷ் ரெட்டி ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது.

முன்னதாக, இந்த மனுக்கள் மீது கடந்த ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு முன்வைத்த வாதம்:

பல ஆண்டுகளாக எல்லை வழியாக பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வந்தனா். உள்ளூா் பயங்கரவாதிகளும், பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்களும், பொதுமக்களை பிணைக் கைதிகளாகப் பயன்படுத்தி வந்தனா். எனவே, குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகியிருக்கும்.

ஜம்மு-காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு துபபாக்கி குண்டுக்கு ஒருவா் கூட இரையாகவில்லை என்று மத்திய அரசு சாா்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, கடந்த நவம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com