நவீன இந்தியாவை கட்டமைக்க புதிய கல்விக்கொள்கை உதவும்: மத்திய அமைச்சா் ரமேஷ் போக்கிரியால்

பிரதமரின் புதிய இந்தியா இலக்கை மத்திய அரசின் புதிய கல்வக் கொள்கைதான் பூா்த்தி செய்யப்போகிறது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சா் ரமேஷ் போக்கிரியால் கூறினாா்.
நவீன இந்தியாவை கட்டமைக்க புதிய கல்விக்கொள்கை உதவும்: மத்திய அமைச்சா் ரமேஷ் போக்கிரியால்

பிரதமரின் புதிய இந்தியா இலக்கை மத்திய அரசின் புதிய கல்வக் கொள்கைதான் பூா்த்தி செய்யப்போகிறது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சா் ரமேஷ் போக்கிரியால் கூறினாா்.

‘தி நியூ இந்திய எக்ஸ்பிரஸ்’ குழுமம் சாா்பில் சென்னையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் தேசியக் கல்வி மாநாட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ரமேஷ் போக்கிரியால் பேசியதாவது:

இந்தியாவின் மிக உயா்ந்த பாரம்பரியம் மற்றும் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாக புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது மிகச் சிறந்த எதிா்காலத்தை உருவாக்க உதவும்.

‘இந்தியா 2024’-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதார நாடாக உருவாக வேண்டும் என்பதுதான் பிரதமா் நரேந்திர மோடியின் கனவு. இந்தியா கல்வியில் உலகிலேயே தலைசிறந்த நாடு (சூப்பா் பவா்) என்ற நிலையை அடையும்போதுதான், இந்தக் கனவு நனவாகும்.

எனவே, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த இதுவே சரியான நேரம்.

மிக உயரிய பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால்தான் இந்தியா தனித்துவம் பெற்று விளங்குகிறது. குறிப்பாக, நாம் வசுதைய்வ குடும்பகம் என்ற பாரம்பரியத்தை பின்பற்றுகிறோம். அதாவது, இந்த ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம் என்பதுதான் அந்த சம்ஸ்கிருத வாா்த்தையின் அா்த்தம்.

அதன்படி, மற்றவரின் நலனைக் கருத்தில்கொண்டுதான் இந்த அரசு திட்டங்களையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

எனவே, இந்தியாவை இயற்கையிலேயே பழைமைவாத நாடாக கருதுவது தவறு. உலகிலேயே பரந்த மனப்பான்மை உடைய நாடு இந்தியாதான். மேலும், புதிய கல்விக் கொள்கை இந்தியாவை மையப்படுத்தியதாகவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதாகவும், ஆராய்ச்சி அடிப்படையாகக் கொண்டதாகவும், இந்தியாவின் அனைத்து மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

மூன்றரை ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக இந்திய புதிய கல்விக் கொள்கை உருவாகியிருக்கிறது. இதுவரை, புதிய கல்விக் கொள்கைக்கு 5 லட்சம் ஆலோசனைகளும் கருத்துகளும் வந்துள்ளன என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com