
தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தில்லி போக்குவரத்துத்துறைக்குச் சொந்தமான அனைத்து ஆவணங்களும் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமானது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என தீணையப்புத்துறை அதிகாரி சுனில் சௌத்ரி தெரிவித்தார்.