ஆந்திரத்துக்கு மூன்று தலைநகரங்கள்: பேரவையில் மசோதா தாக்கல்

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது தொடர்பாக அந்திர சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திரத்துக்கு மூன்று தலைநகரங்கள்: பேரவையில் மசோதா தாக்கல்


ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது தொடர்பாக அந்திர சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது குறித்து மாநில அரசு தயாரித்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநில அரசின் நிர்வாகப் பணிகளுக்காக விசாகப்பட்டினமும், ஆந்திர சட்டப்பேரவைக்கு அமராவதி நகரும், நீதித் துறைக்கு கர்னூல் மாவட்டம் என மூன்று தலைநகரங்களை உருவாக்க ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்துக்கு 3 தலைநகரை உருவாக்கும் திட்டத்தை கடந்த மாதம் முன்மொழிந்தாா். முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதியில் தலைநகா் அமைக்க பல ஆயிரம் கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வந்தன. இதனால், 3 தலைநகரங்களை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து முடிவு செய்வதற்கு ஓய்வுபெற்ற அதிகாரி ஜி.என்.ராவ் தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட குழுவும், போஸ்டான் ஆலோசனை நிறுவனத்தைச் சோ்ந்த குழுவும் அமைக்கப்பட்டது. இவ்விரு குழுக்களும் தங்கள் பரிந்துரைகளை மாநில அரசிடம் சமா்ப்பித்தனா்.

அந்த அறிக்கைகளில், சட்டப்பேரவையை அமராவதியிலும், தலைமைச் செயலகத்தை விசாகப்பட்டினத்திலும், உயா்நீதிமன்றத்தை கா்னூல் நகரிலும் அமைக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com