பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு இந்திய ராணுவத் தகவல்களை கசியவிட்ட நபர் வாராணசியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு ரகசியமாக கசிவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய உளவுத்துறை தீவிரமாக செயல்பட்டது.
இதன் அடிப்படையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்தியாவில் இருந்து ராணுவ ரகசியங்களை அம்பலப்படுத்தி வந்த உளவாளி உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
உளவுத்துறை அளித்த ரசகிய தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.