எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? - மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இருக்க வேண்டுமா? என மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் வேண்டுமா? என மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநில வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஷியாம் குமாரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நரிமன் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் ஷியாம்குமாரை தகுதி நீக்கம் செய்வது குறித்து நான்கு வாரங்களுக்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

விசாரணையின் இடையே, சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு தற்போது இருக்கும் அதிகாரம் அவசியம் வேண்டுமா? என்பது குறித்து நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, மணிப்பூரில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ஷியாம்குமார் ஆண்ட்ரோ தொகுதியில் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளை கைப்பற்றியது. இருப்பினும், பெரும்பான்மைக்குத்(30) தேவையான இடங்கள் இல்லாததால், பாஜக 21 தொகுதிகளை கைப்பற்றிய நிலையிலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷியாம்குமார், தனது பதவியை ராஜினாமா செய்யாமலேயே சட்டப்பேரவையில் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளார். எனவே, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணையிலே நீதிபதிகள் மேற்குறிப்பிட்ட உத்தரவை வழங்கியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com