
மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 8,139 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 8,139 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இன்று புதிதாக 8,139 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 223 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,46,000 ஆகவும், பலி எண்ணிக்கை 10,116 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 4,360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,36,985 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 99,202 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,370 ஆக உயர்ந்துள்ளது. இதில் 122 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,002 பேர் குணமடைந்துள்ளனர்.