

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 616 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி,
கரோனா மொத்த பாதிப்பு 13,737 ஆக உள்ளது, இதில் 4,896 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,750 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 64 ஆக உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 3,41,537 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
ஒரே நாளில் அதிகபட்சமாக 28,701 பேருக்குத் தொற்று பாதித்துள்ள நிலையில், இந்தியாவில் மொத்த கரோன பாதிப்பு 8,78,254ஐ எட்டியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு திங்களன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.