நாளை மீண்டும் கூடுகிறது காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம்

ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடுவதாக காங்கிரஸ் தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

"ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு 109 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையுடன் உள்ளது. எங்களது அனைத்து எம்எல்ஏ-க்களும் ஆதரவுக் கடிதத்தை அளித்துள்ளனர். அவர்கள் பாஜகவின் முயற்சியைத் தோற்கடித்துள்ளனர்.

அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்த நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கூடுகிறது. சச்சின் பைலட் மற்றும் அனைத்து எம்எல்ஏ-க்களையும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். எழுத்துப்பூர்வமான அழைப்பையும் விடுத்துள்ளோம்.

ராஜஸ்தானை பலப்படுத்துவது மற்றும் 8 கோடி மக்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவது பற்றி ஆலோசனை நடத்த வேண்டும். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால், அவர்கள் அதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அனைவரது கோரிக்கைகளையும் கேட்டு, அவர்களுக்குத் தீர்வுகாண தயாராக உள்ளனர்." என்றால் சுர்ஜேவாலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com