கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை: ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம்

கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும்பான்மை இருப்பதை வெளிப்படுத்தும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்
பெரும்பான்மை இருப்பதை வெளிப்படுத்தும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்


கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் நிலவி வரும் நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

"கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமை மீது முழு நம்பிக்கை உள்ளது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இந்தக் கூட்டம் ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் வலுவிழக்கச் செய்ய மேற்கொள்ளப்படும் அனைத்து ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கும் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் அல்லது சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தின் உறுப்பினர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டாலோ, அல்லது அதுசார்ந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்."

இந்தக் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கெலாட் இல்லத்திலிருந்து பேருந்துகள் மூலம் தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையிலுள்ள ஃபேர்மோண்ட் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக, வருமான வரித் துறையினர் இன்று காலை இதே விடுதியில்தான் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com