சிலர் கோயிலைக் கட்டினால் கரோனா ஒழியும் என்கின்றனர்: சரத் பவார்

​சிலர் கோயிலைக் கட்டுவதன் மூலம் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை ஒழிக்க முடியும் என்று நினைப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

சிலர் கோயிலைக் கட்டுவதன் மூலம் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை ஒழிக்க முடியும் என்று நினைப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட இரண்டு தேதிகளைக் குறித்து வைத்திருப்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சரத் பவார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், "கரோனா தொற்றை ஒழிப்பதுவே மகாராஷ்டிர அரசின் பிரதான குறிக்கோளாகும். ஆனால், கோயிலைக் கட்டுவதன் மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்தலாம் என சிலர் நினைக்கின்றனர்." என்றார்.

இதனிடையே,  சிவசேனை கட்சியின் மும்பை தெற்கு தொகுதி எம்பி அரவிந்த் சாவந்த் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:

"கடவுள் ராமர் எங்கள் கட்சியின் நம்பிக்கைக்குரிய விஷயம். இந்த விவகாரத்தில் எங்களது கட்சி எவ்வித அரசியலும் செய்யாது." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com