தில்லியில் 23.48% மக்களுக்கு கரோனா பாதிப்பு; பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை

தில்லியில் வாழும் மக்களில் இதுவரை 23.48% பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதுதான்.

தில்லியில் கரோனா தொற்றுப் பரவல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக கரோனா தொற்று பாதித்து வரும் நிலையில், தில்லியில் வெறும் 23 சதவீதம் பேர்தான் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதுவும் அதிக மக்கள் நெருக்கடி இருக்கும் பகுதிகளில்தான் இந்த பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று 37,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 11 லட்சத்தை எட்டியது. இவர்களில் 7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று 587 பேர் மரணம் அடைந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தற்போது நாட்டில் 4 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com