
suicide bombing in Afghanistan
ஆப்கானிஸ்தானின் மைதான் வர்தாக்கில் கார் மூலம் தற்கொலைப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் மேலும் 9 வீரர்கள் காயமடைந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காபூலுக்கு மேற்கே உள்ள சயீத் அபாத் மாவட்டத்தில் ராணுவப் படையினரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு தலிபன்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது ஆப்கானிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி என்று அவர்கள் கூறியுள்ளனர்.