
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு அமித் ஷா இரங்கல்
புதுதில்லி: மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா பகிர்ந்துள்ள சுட்டுரைப் பதிவில், லால்ஜி டாண்டன் தமது ஒட்டுமொத்த வாழ்வையும் பொதுச் சேவைக்காக அர்ப்பணித்தவர் என்று கூறியுள்ளார்.
பொதுச் சேவை பணியாளராக லால்ஜி டாண்டன், இந்திய அரசியலில் ஆழமான தடத்தை பதித்துச் சென்றுள்ளார் என்றும், அவரது மறைவு நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.
டாண்டனின் ஆன்மா சாந்தியடைவதற்கு இறைவனை வேண்டுவதாகவும், அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு தமது இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.