
முதல்வர் கேஜரிவால்
புது தில்லி: ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருள்களை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுக்கும் திட்டத்துக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
இன்று தில்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் 6 - 7 மாதங்களில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கோதுமை, அரிசி, சர்க்கரை போன்றவை சுத்தமான முறையில் பொட்டலங்களாகக் கட்டப்பட்டு வீடுகளுக்கே கொண்டுச் சென்று வழங்கப்படும். அதே சமயம் ரேஷன் கடைக்குச் சென்று வாங்கிக் கொள்ளும் வசதியும் இணைந்தே இருக்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.