
High court Slams Telangana Govt
தெலங்கானாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு மெத்தனமாக மேற்கொள்வதாக மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது
தெலங்கானா மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,425 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பான வழக்கை தெலங்கானா உயர்நீதிமன்றம் திங்களன்று விசாரித்தது.
மாநில அரசுக்கு எதிரான இந்த வழக்கில், "கரோனா தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் செளகான் மற்றும் நீதிபதி விஜய்சென் ரெட்டி தலைமையிலான அமர்வு விசாரித்த வழக்கு விசாரணையில், தெலங்கானா அரசு நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாதது குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்தது.
தெலங்கானா முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்து வரும் வேளையில் மாநில அரசு மக்களின் மீது அக்கறையற்ற முறையில் செயல்பட்டு வருவதாக அதிருப்தி தெரிவித்த மாநில உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தலைமை செயலர் உள்ளிட்ட 6 அரசு உயர் அதிகாரிகளை ஜுலை 28க்குள் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி நோட்டிஸ் அனுப்பி உத்தரவிட்டது.