
ஏர் இந்தியா
கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர் இந்தியாவின் சில ஊழியர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். மேலும் சில ஊழியர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த பணியாளர்களின் சட்டப்பூர்வ சொந்தத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பீடாக வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கரோனாவால் உயிரிழந்த நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்களின் குடும்பங்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம், ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 5 லட்சம் மற்றும் ஒரு வருடம் தொடர்ந்து பணியாற்றும் சாதாரண ஊழியர்களுக்கு ரூ.90,000 கிடைக்கும். இதுகுறித்த சுற்றறிக்கையும் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏர் இந்தியா ஊழியர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்ற தகவல்களை நிறுவனம் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஜூலை 20 தேதியிட்ட உள் சுற்றறிக்கை, "நிறுவனத்தின் பல ஊழியர்கள் COVID நேர்மறையைப் பெறுகிறார்கள், மேலும் சில ஊழியர்களும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.
ஆனால், ஏர் இந்தியா விமானிகள் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளன.