ஒருநாள் பரிசோதனை 3.5 லட்சத்தைத் தாண்டியது: நாட்டில் இதுவரை 1.54 கோடி பரிசோதனை

நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டிவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஒருநாள் பரிசோதனை 3.5 லட்சத்தைத் தாண்டியது: இதுவரை 1.54 கோடி பரிசோதனை

நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முதல் நடவடிக்கையாக கரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் வியாழக்கிழமை ஒரு நாளில் நாடு முழுவதும் 3,52,801 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூலை 23-ம் தேதி வரை நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பரிசோதனை 1 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து, 170 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 49,310 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 30,601 -ஆக அதிகரித்துள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com