மகன்களின் கல்விக்காக வாழ்வாதாரமாக இருந்த மாட்டை விற்று செல்லிடப்பேசி வாங்கிய விவசாயி

பிள்ளைகள் ஆன்லைன் மூலம் கல்வி பயில வேண்டும் என்பதற்காக, வாழ்வாதாரமாக இருந்த மாட்டை விற்று விவசாயி ஒருவர் செல்லிடப்பேசி வாங்கிக் கொடுத்த சம்பவம் இமாச்சலில் நடந்துள்ளது.

இமாச்சல் மாநிலம் ஜூவாலாமுகியில் உள்ள கும்மெர் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் குமார். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால், அவரது இரண்டு பிள்ளைகளும் அன்னு, திப்பு ஆகியோர் ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆன்லைன் கல்விக்கு ஸ்மார்ட்போன் அவசியம் என்பதால், அதை வாங்கும் வழி தெரியாமல் தவித்துள்ளார் குல்தீப் குமார்.

இவரும் தனக்குத் தெரிந்த வழிகளை எல்லாம் பின்பற்றி கடன் கேட்டார். வங்கியின் கதவையும் தட்டினார். என்னால் ரூ.500 கூட சம்பாதிக்க முடியாத நிலையில், செல்லிடப்பேசி வாங்க ரூ.6000-ஐ எவ்வாறு திரட்ட முடியும் என்று கவலையில் ஆழ்ந்தார்.

ஆனால், பிள்ளைகளின் கல்வி தொடர வேண்டும் என்றால், செல்லிடப்பேசி அவசியம் என்று கட்டாயமாக பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது.

இதனால், தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த ஒரே பசுமாட்டை விற்றுவிட்டு, ரூ.6 ஆயிரத்துக்கு பிள்ளைகளுக்கு செல்லிடப்பேசி வாங்கிக் கொடுத்துள்ளார். வாழ்வாதாரத்தை இழந்து, பிள்ளைகளின் படிப்புக்காக செல்லிடப்பேசி வாங்கிக் கொடுத்த விவசாயியைப் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து தகவல்கள் பரவியதை அடுத்து, ஜூவாலாமுகி எம்எல்ஏ, விவசாயிக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com