அறிகுறி இல்லாதவர்களால் பெரும்பாலான படுக்கை வசதி ஆக்ரமிப்பு: பெங்களூரு மருத்துவர்கள் குற்றச்சாட்டு

அறிகுறி உள்ள மற்றும் தீவிர பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகளை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தாலும் அறிகுறி இல்லாதவர்களே பெரும்பாலான படுக்கை
அறிகுறி இல்லாதவர்களால் பெரும்பாலான படுக்கை வசதி ஆக்ரமிப்பு: பெங்களூரு மருத்துவர்கள் குற்றச்சாட்டு
அறிகுறி இல்லாதவர்களால் பெரும்பாலான படுக்கை வசதி ஆக்ரமிப்பு: பெங்களூரு மருத்துவர்கள் குற்றச்சாட்டு

பெங்களூரு: அறிகுறி உள்ள மற்றும் தீவிர பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகளை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தாலும் அறிகுறி இல்லாதவர்களே பெரும்பாலான படுக்கை வசதிகளை ஆக்ரமித்துள்ளதாக பெங்களூரு மருத்துவர் குற்றம்சாட்டியுள்ளார்.

லேசான அறிகுறி மற்றும் அறிகுறியே இல்லாத 50 வயதுக்கு உட்பட்டவர்கள், வேறு நோய் இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் அல்லது தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கியிருக்கலாம். இவ்வாறு செய்தால் மருத்துவமனைகயில் தீவிர பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதி கிடைக்கும். மருத்துவ வசரி தேவையே படாத பல நோயாளிகள் பெங்களூரு மாநகராட்சியின் பரிந்துரைக் கடிதத்துடன் வந்து மருத்துவமனைகளில் சேர்க்கை பெற்றுக் கொள்கறிர்கள் என்று தனியார் மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

மருத்துவமனைகளும் அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, எந்த சிகிச்சையும் செய்யாமல் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் இது மருத்துவமனைகளை ஒரு ஹோட்டல் நடத்துவது போல மாற்றுவதாகவும், இதற்கு மாநகராட்சியே உதவுவது போல இருப்பதாகவும் மருத்துவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அறிகுறியே இல்லாத நோயாளிகள் சிலர் அமைச்சர்கள், எம்எல்ஏ போன்றவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களை சேர்க்காமல் நிராகரிக்கவே முடியாது. அறிகுறி இல்லாத 60 வயதுக்கு உள்பட்டவர்கள், வேறு நோய் இல்லாதவர்களை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பெங்களூரு மாநகராட்சியே பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்புவது எங்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக வேறு ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கேள்வி எழுப்புகிறார்

ஒரு படுக்கையை கரோனா நோயாளிக்கு ஒதுக்கிவிட்டால், அதனை அடுத்த 10 நாள்களுக்குப் பயன்படுத்தவே முடியாது. நமக்கு இருக்கும் குறைந்தபட்ச மருத்துவ வசதிகளை அதிகம் தேவைப்படுவோருக்குப் பயன்படுத்த வேண்டும். பெங்களூரு மாநகராட்சியும் இதனை உறுதி செய்ய வேண்டும். அறிகுறி இல்லாத நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைத்து, தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை தயாரா வைத்திருக்க உதவ வேண்டும் என்றும் சில மருத்துவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com