

பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா பாதித்த நபர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பாட்னாவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் கரோனா பாதித்தவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் ஐந்தாவது மாடியில் உள்ள குளியலறையிலிருந்து குறித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து புல்வாரிஷரிப் காவல் நிலைய அதிகாரி யு.ஆர் ரஹ்மான் கூறுகையில்,
தற்கொலை சம்பவம் கிடைத்ததும் காவல்துறையினர் அந்த இடத்தை அடைந்து, தற்கொலை செய்துகொண்டவர் குறித்த தகவல்கள் அனைத்தும் சேகரித்து வருகின்றனர்.
பிகாரில் கரோனாவுக்கு 31,980 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,994 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும், 217 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 20,769 பேர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.