ஒரு வருடத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது: மத்திய நிதியமைச்சகம்

கரோனா பாதிப்பு காரணமாக, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், செலவினங்களைக் குறைக்கும் வகையில் ஒரு வருடத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதித் துறை அமைச்சகம் அறி
ஒரு வருடத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது: மத்திய நிதியமைச்சகம்


புது தில்லி: கரோனா பாதிப்பு காரணமாக, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், செலவினங்களைக் குறைக்கும் வகையில் ஒரு வருடத்துக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாது என்று மத்திய நிதித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரடையச் செய்யும் வகையில் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு ஊக்கச் சலுகை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்திருந்தது.

எனவே வரும் காலங்களில் மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் ஒரு வருடத்துக்கு அறிவிக்கப்படாது. இது தவிர, இந்த நிதியாண்டில் வேறு எந்த புதிய திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்படாது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக் கோரி நிதி அமைச்சகத்துக்கு அனைத்துத் துறை அமைச்சகங்களும் கோரிக்கை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்றும், மத்திய அமைச்சர்களும் தங்கள் துறைகளுக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com