நாட்டில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த 5-ஆவது மாநிலமானது ராஜஸ்தான்!
ராஜஸ்தானில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது.


ராஜஸ்தானில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது.
இந்தியாவில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானும் உள்ளது. இன்று காலை நிலவரப்படி ராஜஸ்தானில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதன்மூலமாக இந்தியாவில் 10 ஆயிரம் பாதிப்பைத் தாண்டிய 5வது மாநிலம் ராஜஸ்தான் ஆகும். முன்னதாக மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி, குஜராத்தில் ஆகிய மாநிலங்கள் 10 ஆயிரம் பாதிப்பைக் கடந்தன.
ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,084 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 7,359 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 2,507 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்டோரின் 2,913 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...