பிகாரை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் அமித்ஷா இன்று உரை 

பிகார் மற்றும் ஒடிசாவுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் இன்று உரையாற்றுகிறார். 
பிகாரை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் அமித்ஷா இன்று உரை 

கொல்கத்தா: பிகார் மற்றும் ஒடிசாவுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் இன்று உரையாற்றுகிறார். 

கரோனாவின் பிடியில் உலகமே சிக்கித் திணறும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலமாக தேர்தல் பிரசாரங்களில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்கத்தில் இன்று பாஜக தொண்டர்களிடையே அமித்ஷா உரையாற்ற உள்ளார்.

நாட்டில் கரோனாவின் பாதிப்பு படுதீவிரமாகி உள்ளது. இந்த நிலையில் பாஜகவோ சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பணிகளை பாஜக இப்போதே தொடங்கிவிட்டது. பேரணிகள் மற்றும் கூட்டம் கூட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால், காணொலி மூலம் பொதுமக்களை ஒன்றிணைக்க உள்ளோம் என்று மாநிலக் கட்சித் தலைவர் திலீப் கோஷ் கூறினார். 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் மோசமான செயல்திறனை, அம்பான் புயலுக்குப் பின் மக்களை முன் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் 1,000 க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com