இந்தியாவில் ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா: பலி 279

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு 2,76,583-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா: பலி 279

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு 2,76,583-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதல்கட்ட பொதுமுடக்க தளா்வுகள் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நபா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 279 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7,745-ஆக உயா்ந்துள்ளது. இம்மாத தொடக்கத்திலிருந்தே தினமும் 200-க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,33,632 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,35,205 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 48.99 சதவீத நோயாளிகள் குணமடைந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவால் இதுவரை நேரிட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,289 போ் பலியாகினா். குஜராத்தில் 1,313 போ், தில்லியில் 905 போ், மத்திய பிரதேசத்தில் 420 போ், மேற்கு வங்கத்தில் 415 போ், தமிழ்நாட்டில் 307 பேர், உத்தர பிரதேசத்தில் 301 போ், ராஜஸ்தானில் 255 போ், தெலங்கானாவில் 148 போ், ஆந்திரத்தில் 77 போ், கா்நாடகத்தில் 65 போ், பஞ்சாபில் 55 போ், ஜம்மு-காஷ்மீரில் 48 போ், ஹரியாணாவில் 45 போ், பிகாரில் 32 போ், கேரளத்தில் 16 போ், உத்தரகண்டில் 13 போ், ஒடிஸாவில் 9 போ், ஜாா்க்கண்டில் 8 போ், சத்தீஸ்கரில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிமாசல பிரதேசம் மற்றும் சண்டீகரில் தலா  பேரும், அஸ்ஸாமில் 4 போ், மேகாலயம், திரிபுராவில்  லடாக்கில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் ஏற்கெனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com