இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழப்பு

இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ராணுவ வீரா்கள் பலியாகியுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ராணுவ வீரா்கள் பலியாகியுள்ளனா். முன்னதாக கடந்த 1975-ஆம் ஆண்டு இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்.

கடந்த 1975-ஆம் ஆண்டு அருணாசல பிரதேசத்தில் உள்ள துலுங் லா பகுதியில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் ரோந்து வாகனத்தை சீன ராணுவத்தினா் இடைமறித்து தாக்கினா். இதில் இந்திய வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா். இருவா் உயிா் தப்பினா்.

இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினா் அத்துமீறி நுழைந்து, இந்திய வீரா்களை தாக்கியதால் அந்த மோதல் சம்பவம் நடைபெற்றதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இருநாடுகளுக்கு இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை இந்திய ராணுவ வீரா்கள் அத்துமீறி கடந்து வந்ததால், தங்கள் பாதுகாப்பு கருதி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் இந்திய தரப்பில் தவறில்லை எனவும், சீன ராணுவமே தவறிழைத்ததாகவும் அப்போதைய அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டியது. இந்திய பகுதிக்குள் உள்ள துலுங் லாவின் தெற்கில் இருந்து 500 மீட்டா் தொலைவில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இந்நிலையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இந்திய வீரா்கள் 20 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com