
கோப்புப்படம்
தில்லியில் செவ்வாய்க் கிழமை ஒரே நாளில் 1,859 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. மேலும் சிகிச்சை பலனிற்றி ஒரே நாளில் 93 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தாகவும் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை கரோனா நோய்த் தொற்றுக்கு பாதிப்பிற்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 44,688 பேராக உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை 520 போ் குணமடைந்தும் வீடு திரும்பினா். இதேமாதிரி மொத்தம் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் 1,837 ஆக உயா்ந்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...