மோடியை சீனா புகழ்வது ஏன்? ராகுல் காந்தி

இந்தியா, சீனா இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சீனா புகழ்வது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியா, சீனா இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சீனா புகழ்வது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். (கோப்புப்படம்)
இந்தியா, சீனா இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சீனா புகழ்வது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். (கோப்புப்படம்)


இந்தியா, சீனா இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சீனா புகழ்வது ஏன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை சீன ஊடகங்கள் பாராட்டுவதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"சீனா, இந்திய ராணுவத்தினரைக் கொன்றது. சீனா, இந்திய நிலத்தைக் கைப்பற்றிவிட்டது. பிறகு இந்த பிரச்னைக்கு மத்தியில் ஏன் மோடியை சீனா புகழ்கிறது?"

முன்னதாக:

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15, 16 தேதிகளில் இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனத் தரப்பில் படுகாயமடைந்தவர்கள் உள்பட 43 பேர் பலியாகியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக இருநாட்டு உறவில் பதற்றம் நிலவத் தொடங்கியது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை; யாரும் ஆக்கிரமிக்கவுமில்லை என்றார். 

பிரதமரின் பேச்சு குறித்து, "இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை; யாரும் ஆக்கிரமிக்கவுமில்லை என்றால், இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்? எந்த இடத்தில் வீரர்கள் கொல்லப்பட்டனர்?" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். 

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் உரை குறித்து சனிக்கிழமை பிரதமர் அலுவலகம் விளக்கமளித்தது. அதில், இந்திய ராணுவத்தின் நடவடிக்கையால், கல்வான் பள்ளத்தாக்கில் மோதலுக்குப் பின் இந்திய எல்லைப் பகுதியில் சீனா எந்த ஆக்கிரமிப்பையும் செய்யவில்லை என்றுதான் பிரதமர் கூறியிருந்ததாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com