படைகள் விலக்கம்: இந்திய, சீன ராணுவத் தளபதிகள் பேச்சில் உடன்பாடு

கிழக்கு லடாக் பகுதியில் படை வீரர்களை பரஸ்பரம் விலக்கிக் கொள்வது என இந்தியா, சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு லடாக் பகுதியில் படை வீரர்களை பரஸ்பரம் விலக்கிக் கொள்வது என இந்தியா, சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மோல்டோவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் பிரச்சினைக்குரிய இடங்களிலிருந்து படைகளை விலக்கிக் கொள்வது பற்றிய நடைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் இருதரப்பிலும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

"இந்தியா - சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையிலான பேச்சுகள் மோல்டோவில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. விலகுவது குறித்துப் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது. விலகல் பற்றிய நடைமுறைகள் விவாதிக்கப்பட்டது, இதுதரப்பும் இதை நடைமுறைப்படுத்தும்" என்று இந்திய  ராணுவம் தெரிவித்திருக்கிறது.

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவக் குவிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள  பதற்றத்தைத் தணிக்க, உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே சீனப் பகுதியிலுள்ள மோல்டோ என்ற இடத்தில் நேற்று பகல் 11.30 மணிக்குத் தொடங்கி இந்தப் பேச்சு நடைபெற்றது.

ராணவத் தளபதிகள் நிலையில் நடைபெற்றுள்ள இரண்டாவது கூட்டம் இது. ஏற்கெனவே ஜூன் 6 ஆம் தேதியும் ஒரு கூட்டம் நடைபெற்றது. உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டின் நெடுகில் மே 4 ஆம் தேதிக்கு முந்தைய நிலைமைக்கு சீன ராணுவம் திரும்ப வேண்டும் என்று இந்திய வலியுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com