ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும்: அசோக் கெலாட்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியே மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியே மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் நடந்தவை பற்றி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 

"இன்று நடைபெற்ற காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையை அசோக் கெலாட் எழுப்பினார். கெலாட்டின் பரிந்துரையை ஆதரித்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ், ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் என்றார்."

கடந்த 2017-இல் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததையடுத்து தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார். அவருடைய ராஜிநாமாவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com