
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.400.64 கோடி நிதியை நபாா்டு வங்கி ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நடப்பு நிதியாண்டிற்கு ரூ.400.64 கோடி நிதி அளிக்கும் திட்டத்துக்கு நபாா்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், பொதுப் பணித் துறை, பொது சுகாதாரம், கால்நடை வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்ட பணிகள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
நபாா்டு நிதி உதவியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த ஆலோசனை நிதித் துறை ஆணையா் அருண் குமாா் மேத்தா தலைமையில் நடைபெற்றது.
அதன்படி, இந்த ஆலோசனை கூட்டத்தில், 85 ஊரக சாலைகள் மற்றும் பாலங்கள், 38 குடிநீா் வழங்கல் திட்டங்கள், இரண்டு கால்நடை வளா்ப்பு திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.