வெறுப்பைக் கைவிடுங்கள், சமூக ஊடகங்களை அல்ல: மோடிக்கு ராகுல் அறிவுரை

சமூக ஊடகங்களுக்குப் பதிலாக வெறுப்பைக் கைவிடுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சமூக ஊடகங்களுக்குப் பதிலாக வெறுப்பைக் கைவிடுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்பு சுட்டுரைப் பக்கத்தில் ஒரு பதிவை பதிவேற்றம் செய்திருந்தார். அதில், "இந்த ஞாயிறன்று எனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் மற்றும் யூ ட்யூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகக் கணக்குகளில் இருந்தும் வெளியேறலாமா என்று சிந்தித்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தன்னுடைய சுட்டுரைப் பதிவில் குறிப்பிடுகையில், "கைவிட வேண்டியது சமூக ஊடகங்களின் கணக்குகளை அல்ல, வெறுப்பை" என்றார்.

தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறைக்கு பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சு மிக முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு வெறுப்பைக் கைவிடுங்கள் என மோடிக்கு அறிவுரை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com