பாஜக ஆளும் உள்ளாட்சி அமைப்பில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

மகாராஷ்டிரத்தில் நகராட்சி கவுன்சில் கூட்டம் ஒன்றில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
பாஜக ஆளும் உள்ளாட்சி அமைப்பில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

மகாராஷ்டிரத்தில் நகராட்சி கவுன்சில் கூட்டம் ஒன்றில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் பாஜக ஆளும் 'செலு' நகராட்சியில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை எதிர்த்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பரிஷத் நகரைச் சேர்ந்த மொன்று கவுன்சிலர்கள் உள்பட மொத்தம் 27 கவுன்சிலர்களின் பெரும்பான்மையுடன் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கவுன்சில் தலைவர் வினோத் போரேட் தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவாக உள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com