கரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: பிரதமர் மோடி 

கரோனா வைரஸ் தொற்று குறித்து இந்திய மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி


புது தில்லி: கரோனா வைரஸ் தொற்று குறித்து இந்திய மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலி சென்று திரும்பிய தில்லி நபருக்கும், துபாய் சென்று திரும்பிய தெலங்கானாவைச் சேர்ந்தவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தில்லி நபரின் குடும்பத்தினருக்கும் கரோனா அறிகுறி இருப்பதால் அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது, சில சின்னச் சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அத்துடன், கைகளை அடிக்கடி கழுவுங்கள், கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாயைத் தொட வேண்டாம், வெளியிடங்களில் கவனமாக இருங்கள் என்று போஸ்டரையும் இணைத்துள்ளார்.

மேலும், கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது முதல் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்வது வரை பல்வேறு துறை அமைச்சகங்கள், மாநிலங்கள் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com