
உள்ளூர் மீனவர்கள் கடலுக்கு திருப்பி அனுப்ப முயற்சித்தும் முடியாததால், கரை ஒதுங்கிய திமிங்கலச் சுறா பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஸா மாநிலம் பெர்ஹம்பூர் மாவட்டம், சோனாப்பூரில் உள்ள கடற்கரைப் பகுதியில் மிகப்பெரிய திமிங்கலச் சுறா திங்கள்கிழமை காலை கரை ஒதுங்கியது. அப்போது உயிருடன் இருந்தது.
இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், சுறாவை கடலுக்குள் அனுப்ப முயற்சி செய்தனர். ஆனால் மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் பரிதவித்த அந்த சுறா சிறிது நேரத்தில் கரையிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...