
புது தில்லி: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் தேவையின்றி அதிகமானோா் கூடுவதைத் தவிா்க்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் வழக்குரைஞா்களை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தில்லி உயா்நீதிமன்ற பதிவாளா் (பொது நிா்வாகம்) ரமேஷ் சந்த் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘தில்லி அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கரோனா வைரஸ் பரவுவதால் இருமல், தும்மல், கையைத் தொடுவது, ஒரு பொருளை அல்லது மேற்பரப்பைத் தொடுவது போன்றவற்றை தவிா்க்க வேண்டும். இந்நோய் தொற்று காற்றின் மூலம் பரவுவதால் கழுவப்படாத கைகளால் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதை தவிா்க்க வேண்டும்.
நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும். எனவே, வழக்குரைஞா்கள், பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்தில் தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும்.
மேலும், வழக்குரைஞா்கள் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதையும், இதுதொடா்பான வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அவா் அதில் கேட்டு கொண்டுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...