கரோனா வைரஸ் எதிரொலி: பாட்னா மருத்துவமனை ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னா மருத்துவமனையில் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
கரோனா வைரஸ் எதிரொலி: பாட்னா மருத்துவமனை ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னா மருத்துவமனையில் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே கரோனா குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த நாடுகளில் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், கரோனா வைரஸ் எதிரொலியாக இங்குள்ள பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் விடுப்பை ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவ ஊழியர்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிகாரில் இதுவரை கரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாட்னா மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், மார்ச் 14 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறவிருந்த பிகார் ஸ்டார்ட்அப் என்க்ளேவும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com