சுடுநீரில் குளிப்பதால் கரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

சுடுநீரில் குளிப்பதால் கரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு விளக்கம்

கடுமையான வெப்பத்தில் கரோனா வைரஸ் பரவாது என்பது எவ்வாறு நிரூபிக்கப்படவில்லையோ அதுபோலவே சுடுநீரில் குளிப்பதால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்பதும் உண்மை.

கடுமையான வெப்பத்தில் கரோனா வைரஸ் பரவாது என்பது எவ்வாறு நிரூபிக்கப்படவில்லையோ அதுபோலவே சுடுநீரில் குளிப்பதால் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்பதும் உண்மை.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதில் இருந்து தப்புவதற்கான வழிமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில், கையுறை அணிந்து கொண்டால் கரோனாவில் இருந்து தப்பிக்கலாமா? சுடுநீரில் குளித்தால் கரோனா பரவாதா? என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இதற்கு உலக சுகாதார அமைப்பு சில விளக்கங்களை அளித்துள்ளது. அதாவது, சுடிநீரில் குளிப்பதால் எல்லாம் கரோனா பரவுவதில் இருந்து தப்பிக்க முடியாது. உங்கள் உடல்நிலை வெப்பத்தை விட அதிக வெப்பமான சூடான தண்ணீரில் குளிக்கும் போது  உடல்நிலை பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே சமயம், கையுறை அணிவதை விடவும், அவ்வப்போது கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவதே சாலச் சிறந்தது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com