சீரடி கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

சீரடி சாய்பாபா கோயிலுக்கு சில நாட்கள் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சீரடி கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

சீரடி சாய்பாபா கோயிலுக்கு சில நாட்கள் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சீனாவில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியும், பலியானவர்களின் எண்ணிக்கை 3,800 யும் தாண்டியுள்ளது. 

கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் இன்று 100-யைத் தாண்டியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கோவில்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரத்தில் சீரடியில் சில நாட்கள் பக்தர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com