கரோனாவில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வது எப்படி?

கரோனா.. உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒற்றைச் சொல்லாக மாறிப் போன வைரஸின் பெயர். 140 நாடுகளைத் தாக்கி, 5,700க்கும் மேற்பட்டோரின் உயிரை பலிவாங்கியிருக்கும் கரோனா இப்போது ஒட்டுமொத்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வது எப்படி?


கரோனா.. உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒற்றைச் சொல்லாக மாறிப் போன வைரஸின் பெயர். 140 நாடுகளைத் தாக்கி, 5,700க்கும் மேற்பட்டோரின் உயிரை பலிவாங்கியிருக்கும் கரோனா இப்போது ஒட்டுமொத்த மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி? அதற்கு மருந்து உண்டா? நாம் வெளியே செல்லக் கூடாதா? வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்பது தான் மக்களின் தற்போதைய மிகப் பெரிய கேள்விகளாக உள்ளன.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், நம்மை நாமே எப்படி தற்காத்துக் கொள்வது என்பதுவே..

முதல் விஷயம், நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விடவும், நோய் வராமல் தற்காத்துக் கொள்வதுதான் சிறந்தது.

எனவே, வெளியிடங்களுக்குச் செல்லும் போது, வீட்டிலேயே இருக்கும் போதும், அவ்வப் போது கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். தண்ணீர் ஊற்றி கையை சுத்தமாகக் கழுவ வேண்டும்.

கரோனா பாதித்தவர் இருமும் போது அவரது வாயில் இருந்து வரும் எச்சில் துளிகள் மூலமாக மற்றவருக்கு கரோனா பரவும். இந்த எச்சில் துளி காற்றில் அலைந்து மற்றவர்கள் சுவாசிக்கும் போது அதன் மூலம் கரோனா பரவவும் வாய்ப்பு உள்ளது. மற்றபடி, இருமல் அல்லது தும்மல் மூலம் வெளியே வந்த கரோனா வைரஸ், ஏதேனும் ஒரு இடத்தில் இருக்கும் போது, அதனை நாம் தொட்டுவிட்டு, வாய், மூக்கு அல்லது கண்ணில் வைத்துவிட்டால் அதன் மூலமாகவும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, கைகளை கழுவுதல், ஒரு முறைப் பயனப்டுத்தும் டிஷ்யூ பேப்பரைக் கொண்டு தும்மும் போது அல்லது இருமும் போது வாய் மற்றும் மூக்கை மறைக்க வேண்டும். 

உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம். கைக் கழுவாமல் கண், மூக்கு, வாயைத் தொட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com