கரோனா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன? அது எப்போது தெரியும்?

கரோனா வைரஸ் முதலில் மூக்கு அல்லது வாயில் இருந்து தொண்டையைத் தாக்குகிறது.
கரோனா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன? அது எப்போது தெரியும்?


கரோனா வைரஸ் முதலில் மூக்கு அல்லது வாயில் இருந்து தொண்டையைத் தாக்குகிறது.

அதன் பிறகு மூச்சு விடுவதின் மூலமாக நுரையீரலைச் சென்றடைந்த பின்புதான் ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் அதிகமாகத் தெரிய வருகிறது.

ஒருவரது உடலில் கரோனா வைரஸ் நுழைந்ததும், அழையா விருந்தாளி வந்ததை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு காய்ச்சல் தென்படும். பிறகு அந்த வைரஸ் தொண்டையில் அடிக்கல் நாட்டியதும், வறட்டு இருமல் ஏற்படுகிறது.

எனவே, காய்ச்சல், கடும் தலைவலி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் இருமல் போன்றவை கரோனா அறிகுறிகளாக இருக்கக் காரணம் என்று கூறப்படுவது இதனால்தான்.

சிலருக்கு இந்த அறிகுறிகள் உடனடியாகவும், சிலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு 5 நாட்களிலும், சிலருக்கு வெகு தாமதமாகவும் இந்த அறிகுறிகள் தெரிய வரலாம்.

இதனால்தான் கரோனா பரவ வாய்ப்பு இருப்பவர்களை குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதுவே சில மருத்துவ நிபுணர்கள் 24 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

இந்த அறிகுறிகள் தென்பட்டதுமே சிகிச்சை பெற்றுவிட்டால் காப்பாற்றிவிடலாம். அதுவே கரோனா வைரஸ் நுரையீரலுக்குள் நுழைந்து விட்டால் அப்போதுதான் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.

கரோனா வைரஸ் நுரையீரலுக்குச் சென்றுவிட்டால், மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுவும் கரோனாவுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, வெளியூர்களில் இருந்து அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவ்வாறு வந்தவர்களுடன் இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களோடு பழகுவோர், பணியாற்றுவோர்  போன்றவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டியதும், தங்களது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வதும் அவசியம். அறிகுறிகளைக் கொண்டு முன்கூட்டியே அறிந்து சிகிச்சை பெற்றால் கரோனாவில் இருந்து குணமடைய முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com