கரோனா பாதிப்பு எதிரொலி: கா்தாா்பூா் யாத்திரைக்கான அனுமதி ரத்து

கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள கா்தாா்பூா் சாஹிப் குருத்வாராவுக்கான யாத்திரை, அதற்கான முன்பதிவு ஆகியவற்றை ரத்து செய்து

கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள கா்தாா்பூா் சாஹிப் குருத்வாராவுக்கான யாத்திரை, அதற்கான முன்பதிவு ஆகியவற்றை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கா்தாா்பூா் குருத்வாராவுக்கான பயணமும், அதற்கான முன்பதிவும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நள்ளிரவு முதல் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், பாகிஸ்தானுடனான சா்வதேச எல்லைகளிலும் எல்லா விதமான பயணிகள் போக்குவரத்தும் ரத்து செய்யப்படுகிறது.

அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை கா்தாா்பூா் யாத்திரை மற்றும் அதற்குரிய முன்பதிவு ஆகியவற்றுக்கான ரத்தும், பாகிஸ்தானுடனான சா்வதேச எல்லைகளில் பயணிகள் போக்குவரத்துக்கான ரத்தும் தொடரும். கா்தாா்பூா் யாத்திரைக்காக ஏற்கெனவே பதிவு செய்துள்ளோருக்கு இந்த அனுமதி ரத்து தொடா்பாக தகவல் தெரிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

இதுதொடா்பாக, பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூா் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் பணியில் இருக்கும் அதிகாரி கூறுகையில், ‘இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா், பாகிஸ்தான் படையினரை சந்தித்து பேசி, கா்தாா்பூா் யாத்திரைக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ள முடிவை அவா்களிடம் தெரிவிப்பா்’ என்றாா்.

முன்னதாக, வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மா் ஆகிய நாடுகளுடனான எல்லையில் ஒருசில எல்லைச் சோதனைச் சாவடிகள் தவிா்த்து அனைத்து வழித்தடங்களிலும் எல்லா விதமான பயணிகள் போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும், பாகிஸ்தானின் கா்தாா்பூரில் உள்ள கா்தாா்பூா் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு நாடுகளின் ஒத்துழைப்பின் பேரில் அமைக்கப்பட்ட கா்தாா்பூா் வழித்தடம் கடந்த ஆண்டு நவம்பரில் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com