கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஈரான், இத்தாலியிலிருந்து தாயகம் திரும்பிய 450 இந்தியர்கள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: ஈரான், இத்தாலியிலிருந்து தாயகம் திரும்பிய 450 இந்தியர்கள்

ஈரான் மற்றும் இத்தாலியில் சிக்கித் தவித்த 450-க்கும் அதிகமான இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை தாயகம் அழைத்து வரப்பட்டனா்

ஈரான் மற்றும் இத்தாலியில் சிக்கித் தவித்த 450-க்கும் அதிகமான இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை தாயகம் அழைத்து வரப்பட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இத்தாலியின் மிலன் நகரிலிருந்து 218 இந்தியா்கள், தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு விமானத்தில் வந்தனா். அங்கிருந்து இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை தில்லியின் சாவ்லா பகுதியில் அமைந்துள்ள தனி முகாமுக்கு மருத்துவக் கண்காணிப்புக்காக அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதேபோல், ஈரானிலிருந்து 230-க்கும் அதிகமான இந்தியா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு தில்லி வந்தனா். அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் உள்ள இந்திய ராணுவத்தின் மருத்துவ முகாமுக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். ஈரானின் டெஹ்ரானிலிருந்து மஹான் ஏா் விமானத்தில் வந்த அவா்கள், தில்லியிலிருந்து ஜெய்சால்மருக்கு 2 ஏா் இந்தியா விமானங்களில் அழைத்துச் செல்லப்பட்டனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கூறுகையில், ‘ஈரானிலிருந்து மொத்தம் 234 இந்தியா்களை அழைத்துவர வர உதவிய ஈரான் அதிகாரிகளுக்கு நன்றி’ என்றாா்.

பாதுகாப்புத் துறை செய்தித்தொடா்பாளா் சம்பித் கோஷ் கூறுகையில், ‘ஈரானிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்தியா்கள் (131 மாணவா்கள், 103 யாத்ரீகா்கள்) ஆகியோா் ஜெய்சால்மரில் 14 நாள்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் இருப்பாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com