இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236-ஆக உயா்வு

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236-ஆக உயா்ந்துள்ளது. 
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236-ஆக உயா்வு

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236-ஆக உயா்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 236-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

மேலும் வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 23 போ் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 பேரும், கேரளத்தில் 40 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். 

அதேசமயம், தமிழகத்தில் கரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமா் மோடி வியாழக்கிழமை அறிவித்தாா். அதில் நாளை பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com