
இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள அமேசான் ஊழியர்கள் 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களை நம்பியுள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தியுள்ளன.
இதில், நியூயார்க் நகரம், ஜாக்சன்வில்லி, புளோரிடா, ஷெப்பர்ட்ஸ்வில்லி, கென்டக்கி, கேட்டி, டெக்சாஸ், பிரவுன்ஸ்டவுன், மிச்சிகன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் உள்ள அமேசான் கிடங்குகளில் வேலை செய்தவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள அமேசான் கிடங்குகளில் வேலை செய்த ஊழியர்கள் 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இங்கு வேலை செய்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற சேவைகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...